0
வவுனியா நகர சபையின் 16 வது மாதாந்த சபை அமர்வில்  கெளரவ நகர சபை உறுப்பினர் ARM.லரீப் மூலம் உயரிய சபையில் முன்மொழியப்பட்ட விடயங்கள்.


* எதிர்காலத்தில் அடுத்து வரும்போராட்டம்  நீருக்கான போராட்டம்தான் அதனை கவனத்தில் கொண்டு நகர சபைக்குட்பட்ட குளங்களை ஆளப்படுத்தி அழகுபடுத்துமாறும் அதனூடாக நீரினை சேமிக்க முடியும் அதனை கவனம் செலுத்துமாறும் வேண்டப்பட்டது.

* பிரதான வீதியில் நவீன தரத்திலான தெருவிளக்கு புனரமைப்புத் திட்டம்.

* வர்த்தக நிலையங்கள் பெயர் மாற்றம் விடயமான முன்மொழிவு.

* நீண்ட கால  பிரச்சனையான  அங்காடி வியாபாரிகளுக்கான நிரந்தரமான இட ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தப் பட்டது .

*மாடு அறுக்கும் தொழுவத்தினை இடம் மாற்றி பொருத்தமான மக்களுக்கு அசெளகரியம் ஏற்படாத ஒரு இடத்தினை தெரிவு செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது .

* பல்துறை விளையாட்டுக்களுக்காக பயன்படுத்தப்படும் நகர சபை மைதானத்தினை புணர்நிர்மானம் செய்யுமாறும் மைதானத்தை சுற்றியுள்ள .கழிவுநீர் வாய்க்கால்கள் தூய்மைப்படுத்துமாறும் மைதானத்தினை  வாடகைக்கு பெறுபவர்களுக்கு அதனுடைய ஒழுங்கு விதிமுறைகளை பேணுமாறும் வேண்டிக் கொள்ளப்பட்டது .

* சபையின் மூலம் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை வெகுவிரைவில்  நடைமுறைப்படுத்துவதற்கு உப குழுக்களின் செயற்பாடுகளை
விரைவு படுத்துமாறும் வேண்டினார்

* வவுனியா நகர சபைக்குட்பட்ட பொது மயானங்கள்
( மையவாடி ) தூய்மைப்படுத்துமாறும் அதனை நடைமுறைப்படுத்துமாறும் வேண்டியுள்ளார்.Post a Comment

 
Top