0
வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் வாகனம் மோதி வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (2019.07. 21)  இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.!!!


இவ்  விபத்து  தொடர்பில் தெரியவருவது - 
காமினி மகாவித்தியாலயத்திலிருந்து மன்னார் பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு சொந்தமான வாகனத்துடன் குருமன்காட்டிலிருந்து வவுனியா நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற 23 வயது மதிக்கத்தக்க இளைஞரே இவ் விபத்தில் சிக்கியுள்ளார்.
இதன் காரணமாக தூக்கி வீசப்பட்ட இளைஞன் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

 
Top