0
மலையகத்தில் தொடரும் கனத்த மளை காரணமாக பேர்ஹாம் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 9 குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் இடம்பெயர்வு.!!!


மலையகத்தில்தொடரும் கனத்த மழை  காரணமாக தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 09 குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் நேற்றைய தினம்  வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு இன்றும் மரங்கள்  முறிந்து வீழ்ந்ததோடு அங்குள்ள வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளம் காரணமாக  9 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லையெனவும் குறைந்தளவான  பொருட் சேதங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதனால்  இக்குடியிருப்பில் வசித்து வந்த 44 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள்  தோட்ட சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 44 பேரில் 9 ஆண்கள், 12 பெண்கள், 23 சிறுவர்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

Post a Comment

 
Top