0கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் - வடக்கு  மாகாண முன்னாள் முதலமைச்சர் கௌரவ நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முக்கிய சந்திப்பு.!!!


கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களுடன் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய கௌரவ நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இடையிலான சந்திப்பு சற்றுமுன்னர் கல்முனை சுபத்திரா ராமய விகாரஸ்தானத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துதல் தொடர்பாகவும் அம்பாறை வாழ் தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான கருத்து முரன்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ். சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் திருமதி ரூபா சுரேந்தர், மகளிர் அணி உப செயலாளர் திருமதி இளவேந்தி நிர்மலராஜ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல்
மற்றும் - 
வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கே. கிருஸ்ணமீனன், தொகுதி அமைப்பாளர் இரா.மயூதரன்,  கணக்காளர் ராஜாதுரைசிங்கம் மற்றும் ஊடக உதவியாளர் எம்.சதீஸ் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.Post a Comment

 
Top