0


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐக்கியதேசியக் கட்சியின் அடிமைகளாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் குற்றம்சுமத்தியுள்ளார்.
இதேவேளை அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடனேயே தமிழ் மக்கள் தொடர்ந்தும்  ஏமாற்றப்படுவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.
 கிளிநொச்சி கண்ணகி ஆலய அம்மன் கோயிலில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதேவேளை,அண்ணதானம் வழங்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இதனையடுத்து,ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே  நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் இதனைக்  குறிப்பிட்டார்
இதேவேளை தமிழ் தேசிய  கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு வழங்குகின்ற நிபந்தனையற்ற  ஆதரவை நிறுத்தி,  மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றகூடியவாறு  செயற்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மேலும் தெரிவித்தார்.
பூஜை வழிபாட்டின் பின்னர்,நாடாளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி மாவட்ட மக்களுடன் கலந்துரையாடல்களையும் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top