0
மன்னாரில் அதிகளவான கஞ்சா மூடைகளை லொறியில்  ஏற்றிச்சென்ற நபர் கைது.!!!


இன்று அதிகாலை மன்னார் மதவாச்சி வீதியில் லொறியில் மிகப்பெரும் தொகையான கஞ்சா மூடைகளை கடத்திச்சென்ற நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாரிலிருந்து சென்ற லொறியை மாதம்பிட்டிய பகுதியில் வைத்து  பரிசோதித்ததில் 20 மில்லியன் பெறுமதியான 203 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்களே எடுத்து செல்லப்பட்டவையாகும்.

சந்தேகநபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்து மேற்கொண்டுள்ளனர்.


Post a Comment

 
Top