0
பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது, முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என தெவிக்கப்படுபவர்களால்  தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.!!!


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படுபவர்களால்   தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் ஒலிவில் துறைமுக அதிகாரசபை  தங்குமிடம் பகுதியில் இன்று சனிக்கிழமை (20) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் மற்றும் ஊடகமொன்றிற்கு செவ்வி வழங்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட குழுவினர் கலந்த கொண்டிருந்தனர்.

இதன் போது  பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தொடர்பாக மேற்குறித்த ஊடக  நேரலை செவ்வியில் கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமின் ஆதரவாளர்கள் என வந்தவர்களினால் திடீர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும்  அப்பகுதியில் டயர்கள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு காட்டப்பட்டதுடன்  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் காயங்கள் எதுவும் இன்றி தப்பியதுடன் அவரது வாகனம் சிறு சேதத்துக்குள்ளாகியது.

சம்பவ இடத்திற்கு கடற்படையினர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் போது அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவுவதனையும் அவதானிக்க முடிகிறது.

Post a Comment

 
Top