0
வடமராட்சி கிழக்கு மாமுனை  கலைமகள் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் போரின் போது  உயிரிழந்தோர் நினைவாக வட மாகாணம் தழுவிய ரீதியாக நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வு  வடமராட்சி கிழக்கு மாமுனை கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்.

கௌரவ விருந்தினராக வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் கனகேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் குலேந்திரராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய அணியினருக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தனர்.

 நிகழ்வில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளும்  எமது அரசாங்கம் தான் ஆட்சிக்கு வர உள்ளது எனவே சிறுபான்மை இன மக்களாகிய நாங்கள் சிறந்த ஒரு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.ஆதரவு அளிப்பதின் மூலம் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

Post a Comment

 
Top