0
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை அமைக்க இடைக்கால தடை உத்தரவு மற்றும் பக்கதர்கள் ஆலய தரிசனத்திலும் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.!!!  


திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்து பரிபாலிக்க வேண்டுமென  திருகோணமலை மேல் நீதி மன்றம் இன்று உத்தரவு பிறத்துள்ளது.

மேலும் கன்னியா பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம் அதன் ஆதனங்களின் தர்மகர்த்தா சபையினால் திருகோணமலை மேல்நீதிமன்றில் கடந்த 19ம் திகதி அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இதற்கான மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆயராகினர்.


மனுதாரர் தரப்பில் வழங்கப்பட்ட சமர்ப்பணங்களை தொடர்ந்து நீதிமன்றம் சில இடைக்கால கட்டளைகளை வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் கன்னியா பிள்ளையார் ஆலயத்தை இடித்து அங்கு அமைக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாண பணிகளை  உடனடியாக நிறுத்தும்படியும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம்  அதற்கு சொந்தமான மற்றைய வழிபாட்டிடங்களுக்கு பக்தர்கள் சென்றுவருவதையும் சமய அனுட்டானங்களை மேற்கொள்ளுவதற்கும் எவரும் தடை செய்ய முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன்  கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம் மற்றும்  அதற்கு சொந்தமான மற்றைய வழிபாட்டிங்களின் பரிபாலனத்தை அதன் தர்மகர்த்தா சபை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.


Post a Comment

 
Top