0
சுருள்சிரைகள்  நோயும் அதற்கான தீர்வுகளும்.!!!
சுருள்சிரைகள் என்பவை வீங்கிய அல்லது விரிவடைந்த நரம்புகள் ஆகும்.

அவை, பொதுவாக நீலம் அல்லது அடர்பழுப்பு நிறத்தில் இருக்கும். அவை முடிச்சுகளுடனும், புடைத்தும் பின்னியும் தோற்றமளிக்கலாம். பெரும்பாலும் கால்களிலேயே அவை ஏற்படுகின்றன.

இரத்தம் பின்னோக்கிச் செல்லாதவாறு வரிசையான அடைப்பிதழ்கள் (வால்வுகள்) தடுக்கின்றன.

அவை மூடியும் திறந்தும் இரத்த ஓட்டத்தை அனுமதிக்கின்றன. இந்த அடைப்பிதழ்கள் பலவீனம் அல்லது சிதைவு அடைந்தால் இரத்தம் பின்னோக்கிப் பாய்ந்து நரம்புகளில் தேக்கமடைகின்றன.

இதனால் அவை விரிவடைந்து அல்லது வீங்கித் தோற்றமளிக்கின்றன. இதன் காரணமாக இரத்தம் மேலும் பின்னோக்கிப் பாய்ந்து நரம்புகள் இன்னும் விரிவடையும்.

நிற்கும் நிலையில் அதிக அழுத்தத்துக்கு உட்படும் காலின் மேற்பரப்பு நரம்புகள் சுருள்சிரைகளாக மாறும் வாய்ப்பு கூடுதலாகும்.

உடல் தோற்றத்தைப் பாதிப்பதோடு, நிற்கும்போது குறிப்பாக இது வலியைத் தரும். நீடித்த சுருள் சிரையால் கால்வீக்கம், நரம்புப்படை, தோல்கட்டியாதல், புண் ஆகியவை ஏற்படும். உயிருக்கு ஆபத்தான நிலை எதுவும் ஏற்படுவதில்லை. ஆனாலும் உயிருக்கு அபாயகரமான ஆழ்நரம்பு இரத்த உறைவையும் இதனையும் ஒன்றாகக் கருதக் கூடாது.


நோய் அறிகுறிகள்:
*****************
சுருள்சிரைகள் அடர்பழுப்பு அல்லது நீல நிறமாகவும், பொதுவாக தோற்றத்தில் பின்னியும் புடைத்தும் காணப்படும். சிலருக்கு வலியும் அசௌகரியமும் இருக்கும்.அறிகுறிகள்:
*******************
கால்களில் அசௌகரியமும், வலியும், கனமும்

பாதிக்கப்பட்ட காலில் சிலந்தி நரம்பு தோன்றுதல்

கால், கணுக்கால் வீக்கம்
காலில் எரிச்சலும் துடிப்பும்

குறிப்பாக இரவு நேரத்தில் கால் சதைப்பிடிப்புகள்

பாதிக்கப்பட்ட நரம்புகளுக்கு மேல் உலர்ந்த, அரிப்புடன் கூடிய, மெல்லிய தோல்காரணங்கள்:
**************
பலவீனமான நரம்புச் சுவர்களும் அடைப்பிதழ்களுமே (வால்வுகள்) சுருள்சிரைகளுக்குக் காரணம். பிற ஆபத்துக் காரணிகள் வருமாறு:


பாலினம் :
***********
ஆண்களை விடப் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படக் கூடும்


மரபியல் :
**********
ஒரே குடும்பங்களில் பொதுவாக உண்டாகிறது
வயது : வயதானவர்களுக்கே பெரும்பாலும் ஏற்படும்
அதிக எடை : அதிக எடை உள்ளவர்களுக்கும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் உண்டாக வாய்ப்பு அதிகம்


கர்ப்பிணிகள் :
***************
பெண்களின் வாழ்க்கையில் கர்ப்பமுறும் காலத்திலேயே பெரும்பாலும் ஏற்படலாம்.
நோய்கண்டறிதல்
சுருள்சிரைகளால் அபூர்வமாகவே ஆபத்து ஏற்படுவதால் இதற்கு மருத்துவம் எதுவும் தேவையில்லை. தோற்றத்தைக் கொண்டே இது கண்டறியப்படுகிறது. நிற்கும் நிலையில் வீக்கம் எதுவும் இருக்கிறதா என்று மருத்துவர் நோயாளியின் காலை சோதனை செய்கிறார்.
பிற சோதனைகள்:
********************

# டாப்லர் சோதனை (Doppler test) :

நரம்புகளில் எத்திசையில் இரத்த ஓட்டம் உள்ளது என்று கேளா ஒலி மூலம் கண்டறியப்படுகிறது. இதன் வழி அடைப்பிதழ்களின் செயல்பாட்டை அறியலாம்.


# வண்ண இரட்டை கேளாவொலி வரைவி :

இதன் மூலம் நரம்புகளின் வண்ண பிம்பங்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நரம்புகளில் உள்ள கோளாறுகளையும், இரத்த ஓட்டத்தின் வேகத்தையும் நிபுணர்களால் பார்க்க முடியும்.நோய் மேலாண்மை:
*********************
சுருள்சிரைகளுக்குப் பெரும்பாலும் மருத்துவம் தேவைப்படுவதில்லை. பிரச்சினை இல்லாதபோது மருத்துவம் தேவையும் இல்லை. தேவைப்பட்டால்:பழையமுறைகள்:
******************
கீழ்வருவனவற்றால் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம்:

கால்களை உயரமாகத் தூக்கி வைத்தால் தற்காலிக நிவாரணம் கிடைக்கும்தொடர் உடற்பயிற்சி:
*********************
வெவ்வேறு அழுத்த, ஏற்ற இறக்கம் கொண்ட, பலபடித்தான சுருக்கும் காலுரைகள் (வகுப்பு II அல்லது III) சுருள் சிரைகளால் பாதிக்கப்பட்ட கால்களின் வீக்கத்தைக் குறைத்து குருதி நுண்ணோட்டத்தை மேம்படுத்துகிறதுஅறுவை மருத்துவம் :
கட்டி அவிழ்த்தல்:
**********************
பாதிக்கப் பட்ட காலில் உள்ள நரம்பைக் கட்டி பின் அவிழ்க்கும் முறையைப் பெரும்பாலான மருத்துவர்கள் கையாளுகின்றனர்.ஸ்கெலரோதெரப்பி:
*********************
சிறிய, நடுத்தர சுருள்சிரை கொண்டவர்களுக்கு இது பயன்படுத்தப் படுகிறது. இதில் ஒரு வேதிப்பொருள் நரம்புகளுக்குள் செலுத்தப்படுகிறது. இம்மருந்து தேவையற்ற நரம்பைச் சுருக்கி மூடிவிடுகிறது.## சிக்கல்கள்:
இரத்த ஓட்டத்தைத் தடுப்பதால் சுருள்சிரை ஆபத்தானதும் கூட.


## இரத்தப்போக்கு :
காலில் காயம் ஏற்படும்போது தோலுக்கு அருகில் உள்ள நரம்புகளில் இரத்தக் கசிவு ஏற்படலாம்.


## சிரைச்சுவர் வீக்கம் :
நரம்புகளில் உண்டாகும் இரத்த உறைவால் நரம்புகள் அழற்சி அடைதல். இது சுருள்சிரைகளில் ஏற்படலாம்.## நீடித்த நரம்புக் குறைபாடு :
இரத்தம் நரம்புகளில் சரியான முறையில் பாயவில்லை என்றால், இரத்தத்துடன் தோல் பரிமாறிக் கொள்ளும் உயிர்வளி, உயிர்ச்சத்து, கழிவுகள் ஆகியவற்றைத் தோலும் இரத்தமும் பரிமாறிக் கொள்வதில் இடையூறுஉண்டாகும். இந்த இடையூறு நீண்ட காலம் நீடித்தால் அது நீடித்த நரம்புக் குறைபாடு என்று அழைக்கப்படும்.

Post a Comment

 
Top