0
மேஷம்:
Mesham Rasi
இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்:
Rishabam Rasi
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.  புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மிதுனம்:
midhunam
உற்சாகமான நாள். மாலையில் மனச் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கடகம்:
Kadagam Rasi
வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படும்.

சிம்மம்:
simmam
தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

கன்னி:
நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் பணலாபம் கிடைக்கும்.

துலாம்:
Thulam Rasi
உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam
நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். வெளியில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்கு இன்றைய ராசி பலன் படி தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

மகரம்:
Magaram rasi
காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.


கும்பம்:
Kumbam Rasi
சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. உற்சாகமாகக் காணப்படுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்:
meenam
அதிகப்படியான அலுவலக வேலைகளின் காரணமாக வீட்டிலும் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் வகையில் பொருள் வரவுக்கான வாய்ப்பு உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.Post a Comment

 
Top