0
காலி வீதியில் களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் இன்று அதிகாலை ( 04.08.2019 ) தனியார் - அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.!!!


காலி வீதியில் களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் இன்று அதிகாலை தனியார்  பேருந்து மற்றும் அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இவ் வவிபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 06 பயணிகள் பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவ் விபத்தில் 3 ஆண்கள் 3 பெண்கள் மரணமடைந்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக தெரிய வருவது -
52 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 43 ஆண்கள் 8 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டவேளை  எதிர்த்திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
Post a Comment

 
Top