0
இன்றைய நாள் எப்படி.!!!   07.08.2019

மேஷம்:
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.
ரிஷபம்:
கணவன் – மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.
மிதுனம்:
வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வீட்டில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை ஏற்படும்.
கடகம்:
இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்:
இன்று உற்சாகமான நாளாக அமையும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டு.
கன்னி:
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளையும், பயணங்களையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
துலாம்:
இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும்.. உற்சாகமான நாள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
விருச்சிகம்:
எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் பணம் வரக்கூடும்.
தனுசு:
உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்

மகரம்:
உங்களுடைய அனுபவப்பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உதவுவார்கள்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.

கும்பம்:
பிற்பகல் வரை எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உற்சாகம் பிறக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.
மீனம்:
மீன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி முற்பகல் வரை புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். மாலையில் நீண்டநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.


Post a Comment

 
Top