0
17 வயது யுவதி ஒருவரை கடத்திச் சென்ற 11 சந்தேக நபர்களை கிராம மக்களின் உதவியுடன் புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.!!!வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிராமோட்டை பகுதியில் 17 வயது யுவதி ஒருவரை கடத்திச் சென்ற 11 நபர்களை கிராம மக்களின் உதவியுடன் நேற்று (19.08) இரவு 12.30 மணியளவில் கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி உட்பட அவரது குடும்பத்தினர் கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வசித்து வந்துள்ளதுடன் மூன்று வருடங்களுக்கு முன்னர் நெடுங்கேணி காஞ்சிராமோட்டை, நாவலர் பாம் பகுதியில் மீள் குடியேறி வசித்து வந்தனர்..

இந் நிலையில் நேற்றிரவு (19.08) 11 மணியளவில் திடீரென வெள்ளை ஹயஸ் ரக வான் மற்றும் முச்சக்கர வண்டிகளில் வந்த சந்தேக நபர்கள் யுவதியை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர்.

17 வயதான யுவதியை வானில் ஏற்றிக் கடத்திச் சென்ற போது, உடனடியாக செயற்பட்ட கிராமவாசிகள் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றதுடன், புளியங்குளம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட புளியங்குளம் பொலிசார் கிராம மக்களுடன் இணைந்து வாகனத்தை மடக்கிப் பிடித்து யுவதியை மீட்டதுடன், வான் மற்றும் முச்சக்கர வண்டிகளில் இருந்த 10 சந்தேக நபர்களையும் இக் கடத்தலுக்கு உடந்தையாக செயற்பட்ட சாரதியையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வேளையில் குறித்த நபர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் மீது மக்கள் தாக்க முயற்சித்ததுடன் வாகனத்தையும் தாக்க முயற்சித்தனர். இருப்பினும் பொலிசார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

யுவதியை கடத்திச் செல்ல முயற்சித்தவர்களின் பிரதான சந்தேக நபர், யுவதியின் வீட்டை நிர்மாணித்த மேசன்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் வவுனியா ஆச்சிபுரம் பகுதியைச்  சேர்ந்தவர்கள் எனவும், இவ் சந்தேக நபர்களில் ஒருவர் குறித்த யுவதியை காதலித்துள்ளார் எனவும் தெரிவித்ததுடன், காதல் விவகாரமே கடத்தலுக்கு காரணம் என புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான குறித்த நபர்களை நீதிமன்றில் ஆயர்ப்படுத்த நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.


Post a Comment

 
Top