0
‘எழுக தமிழ்-2019’ எழுச்சி நிகழ்விற்கு ஆதரவு -  தமிழர் மரபுரிமைப் பேரவை.!!!


வடக்கு கிழக்கு வாழ்கின்ற தமிழ்மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக, கூட்டாக வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்படவிருக்கும் ‘எழுக தமிழ்-2019’ எழுச்சிப் பேரணியில் அனைவரும் பங்கேற்பது என்ற அடிப்படையில் தமிழர் மரபுரிமைப் பேரவை தமது பூரண ஆதரவினை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

‘எழுக தமிழ்-2019’ எழுச்சிப் பேரணி முன்னெடுப்புக்களில் பங்காளர்களாக இணைந்து செயலாற்றுவது தொடர்பில் வடக்கு கிழக்கில் செயல்பட்டுவரும் பொது அமைப்புகளுடன் தமிழ் மக்கள் பேரவை சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் ஆரம்பம் முதலே ‘எழுக தமிழ்-2019’ எழுச்சி நிகழ்விற்கு ஆதரவாகவிருந்துவரும் தமிழர் மரபுரிமைப் பேரவைத் தரப்புடன் கலந்துரையாடப்பட்டதையடுத்து அவர்கள் தமது ஆதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top