0
21.08.2019 இன்றைய நாள் எப்படி.!!!மேஷம்:
பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்க உகந்த நாள்.

மிதுனம்:
புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

கடகம்:
அதனால் பிறர் உதவியை நாடவேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

சிம்மம்:
இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

கன்னி:
பிற்பகலுக்குமேல் திடீர் செலவுகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மனம் உற்சாகமாகக் காணப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

துலாம்:
புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். அதிகரிக்கும் செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் வாங்க நேரும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

விருச்சிகம்:
எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பொறுமையுடன் இருக்கவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

தனுசு:
எதிர்பார்த்த பணம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். கோயில் விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். ஆனால், பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

மகரம்:
உற்சாகமான நாள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

கும்பம்:
அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வெளியில் செல்லும்போது எடுத்துச்செல்லும் பொருள்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

மீனம்:
பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். பண தேவை அதிகரிக்கும். பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

Post a Comment

 
Top