0
பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா நகரசபை கலாச்சார மண்பத்தில் இடம்பெறவுள்ளன.!!!பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா நகரசபை கலாச்சார மண்பத்தில் நகரசபைத் தலைவர் கௌதமன் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைத்துள்ள  மாவீரனின்  நினைவுத்தூபி கடந்த சில தினங்களாக நகரசபை ஊழியர்களினால் அழகு படுத்தப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நினைவுத் தூபிக்கு காலை 8.15 மணிக்கு மலர் மாலை அணிவிப்பை அடுத்து  நகரசபை கலாச்சார மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

குறித்த நிகழ்வில்  முதன்மை விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும், விசேட விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும், பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தலைவரும் முன்னாள் வவுனியா மாவட்ட சபை தலைவருமான மு.சிற்றம்பலம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.Post a Comment

 
Top