0
24.08.2019 இன்றைய நாள் எப்படி.!!!


மேஷம்:
மனம் உற்சாகமாகக் காணப்படும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும்.

ரிஷபம்:
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். கணவன் – மனைவி இடையில் பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்திகள் வந்து சேரும்.

மிதுனம்:
பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கடகம்:
பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் உற்சாகம் ஏற்படவும் கூடும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அன்றாட பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கன்னி:
உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் உண்டாகும்.

துலாம்:
உறவினர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்:
அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அனுஷம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

தனுசு:
புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:
வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர், நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

கும்பம்:
சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்:
பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும். ஆனால், தாய்மாமனின் ஆதரவு மகிழ்ச்சி தரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உத்திரட்டாதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

Post a Comment

 
Top