0
கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முசலி பிரதேசத்துக்கான 33 குடும்பங்களுக்குரிய  மின் இணைப்புக்களை வழங்குவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்க்கான ஆவணங்கள் மக்களிடம் கையளிப்பு.!!!


கைத்தொழில் மற்றும் வணிக  அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் அமைச்சர் கெளரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முசலி பிரதேசத்துக்கான 33 குடும்பங்களுக்குரிய  மின் இணைப்புக்களை வழங்குவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்க்கான ஆவணங்கள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று றைசுதீன் அர்களின் தலைமையில் சிலாபத்துறையில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளருமான ரிப்ஹான் பதியுதின், முஸலி பிரதேச சபையின் தவிசாளர் சுவியான், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர்  மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் இணைப்பாளருமான அலிஹ்ஹான் ஷரிப் அவர்களுடன் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.Post a Comment

 
Top