0
முகப்பூச்சுக்கள் (கிறீம் வகைகள்) தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென நுகர்வோர் அதிகாரசபை அறிவித்தல் விடுத்துள்ளது.!!!

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் பெரும்பாலான பெண்கள் தமது சருமத்தை அழகுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் முகப்பூச்சுக்கள் (கிறீம் வகைகள்) தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென நுகர்வோர் அதிகாரசபை அறிவித்தல் விடுத்துள்ளது.

தற்போது சந்தையிலுள்ள விற்பனையாகும் இவ்வாறான முகப்பூச்சுக்கள் (கிறீம் வகைகள்) குறித்த  அளவிலும் பார்க்க கூடுதலான இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளமை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்து என நுகர்வோர் அதிகாரசபை தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த விடயத்தை கவனத்திற்கொண்டு பாவனையாளர்கள் கொள்வனவு செய்யவேண்டுமெனவும் இதனால் சருமம் தொர்பான பல பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

 
Top