0
வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்காந்தராஜா அவர்களின் மக்கள் சந்திப்பு முதல் கட்டமாக முல்லைத்தீவு ஆனந்தபுரத்தில் இடம்பெற்றன.!!!
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் வளர்ச்சியும் அதன் மகிழ்ச்சியும் என்னும் தொனிப்பொருன் கீழ்  வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்காந்தராஜா அவர்களின் மக்கள் சந்திப்பு முதல் கட்டமாக முல்லைத்தீவு ஆனந்தபுரத்தில்  இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில்  முதல் கட்டமாக ஸ்ரீ மகாகணதி ஆலயத்திற்கு புனரமைப்புக்கு  நாலு லட்சம்  (400000.00) ரூபாய் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை கெளரவிக்கும் முகமாக ஆனந்தபுரத்தின் மூத்த குடிகளில் ஒருவரான திரு வி.சோதிலட்சுமி அம்மா அவர்களால் கெளரவ பாராளுமன்றம் உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா அவர்களிற்கு  பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

மேலும் ஆனந்தபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம்  மற்றும் கிராம மக்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக புளியங்குளத்தில் அமைந்துள்ள குளப்  புனரமைப்பிற்கு கெளரவ பா.உ சாந்தி அவர்களால்   (1500000.00) பதினைந்து லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.Post a Comment

 
Top