0
போதை கலந்த குடிபானத்தை வழங்கி கொள்ளையிட முயன்ற நபர் ஒருவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.!!! 


 இச் சம்பவம் குருணாகலில் இருந்து திருகோணமலை வரை பயணித்த தனியார் பேருந்தில் இடம்பெற்றுள்ளது இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, மேற்படி பேருந்தில் திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் பிறிதொரு இடத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்

இந் நிலையில் பேருந்தில் அப் பெண்ணுடன் நட்புறவைப் பேணிய 45 வயதுடைய நபர் ஒருவர் குடிபானம் ஒன்றினை வழங்கியுள்ளார். அதனைக் குடித்தவுடன் அப்பெண் மயங்கியுள்ளார்.

 இந் நிலையில் அப் பெண்ணிடம் இருந்த ஒரு இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் திருடியுள்ளார்.

இதேவேளை குறித்த பெண் குடிபானத்தை அருந்தியவுடன் மயங்கியதை பேருந்தில் இருந்தவர்கள் அவதானித்துள்ளனர்.

இதனால் சந்தேகநபர் பேருந்துக்குள் வைத்தே மக்களால் பிடிக்கப்பட்டுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

 
Top