0
கௌரவ ஆளுநரின் வழிகாட்டலில் இலவசமாக தொழிற்தகைமையை பெற்றுக்கொள்ளும் விசேட செயற்திட்டம்.!!!


வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின்  வழிகாட்டலுக்கமைவாக வடமாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு RPL முறையில் NVQ சான்றிதழ் வழங்குவதற்கான செயற்பாடுகள் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து நடைபெற்று வருகின்றது. 

இச்சான்றிதழ்களை  கணனி, மின்னியல், தையல், தச்சுவேலை, மேசன்வேலை, நீர்க்குழாய் பொருத்துதல், இரும்பு ஒட்டுனர், வர்ணப்பூச்சு வேலை போன்ற தொழில்களை மேற்கொள்பவர்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த செயற்திட்டத்தில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த மூவாயிரம் (3000) இளைஞர் யுவதிகள் மற்றும்  கிளிநொச்சி ஐநூறு (500), மன்னார் ஐநூறு (500) , முல்லைத்தீவு ஐநூறு (500) , வவுனியா ஐநூறு (500)  என ஐந்து மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான பதிவுகள் பிரதேச செயலகங்களில் தற்போது இடம்பெற்று வருகின்றன. தொழில்சார் பயிற்சியினைப் பெற்றவர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் RPL முறையினுடாக NVQ சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாதிருப்பின் தங்கள் பிரிவிலுள்ள பிரதேச செயலங்களுக்குச் சென்று எதிர்வரும் 23ஆம் திகதிக்கு (23-08-2019) திகதிக்கு முன்பாக பதிவினை மேற்கொள்ளுமாறு வட மாகாண கௌரவ  ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவுசெய்யப்பட்டவர்களுக்கு NAITA நிறுவனத்தினால் செய்முறைப் பரீட்சைகள்  நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இச்சான்றிதழ்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில்வாய்ப்பிற்கு அடிப்படைத் தகைமையாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top