0
கனவுகள் கலைந்த மதன் - கனவு இல்லம் எங்கே...?.!!!லண்டனில் வசிக்கும் நபரொருவர் யாழ்ப்பாணம் வருகைதந்து தனது காணியை பார்த்து வீட்டைக்காணவில்லை என அதிர்ச்சியடைந்து தற்கொலைக்கு முயன்ற சோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் அண்மையில் நடந்தேறியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

லண்டனில் வசிக்கும் மதன் என்ற நபர் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிரமாண்ட வீடொன்றை கட்ட விரும்பினார்.

அதன் காரணமாக யாரிடம் பணத்தை கொடுத்து கட்டுவதென்று தெரியாமல் யாழ்ப்பாணம் ஆறுகால்மடத்தில்  வசிக்கும் அவரது உடன்பிறந்த சகோதரனிடம் (தம்பி) தனது தந்தையால் அவருக்கு கொடுக்கப்பட்ட சாவகச்சேரி பகுதியில் உள்ள காணியில் வீடொன்றை கட்ட விரும்பியதன் அடிப்படையில்  நீ பொறுப்பாக நின்று கட்டித்தருகிறாயா என சகோதரனை கேட்டுள்ளார்.

அதற்கு  அவரது சகோதரன் (தம்பி) சம்மதம் தெரிவித்து  பணத்தை அனுப்புங்கள் நீங்கள் விரும்பிய வடிவில் வீட்டை  கட்டிதருகின்றேன் என உறுதியளித்துள்ளார்.

இதற்கு அடுத்த கட்டமாக  வீடு கட்டுவதற்காக பல லட்ஷம் தொகை பணத்தை பகுதி பகுதியாக தனது சகோதரனுக்கு மதன் அனுப்பியுள்ளார்.

சகோதரனும் பதிலுக்கு வீட்டு வேலை செய்ததற்கான புகைப்படங்களை மதனுக்கு அனுப்பியுள்ளார்.

சுமார் ஒரு கோடியளவில் அனுப்பிய நிலையில் வீடு கட்டி முடிந்ததற்க்கான புகைப்படங்களும் தம்பியிடமிருந்து அனுப்பட்டது.

தனது சொந்த ஊரில் ஒரு கனவு இல்லத்தை கட்டி முடித்துவிட்டேன் என்ற நிம்மதியுடன் மதன் சில மாதங்களுக்கு பிறகு தனது மனைவி குழந்தைகளுடன் யாழுக்கு வர முடிவெடுத்து பிரகாரம் தம்பிக்கு தான் யாழ் வருவதாக கூறியுள்ளார்.

மேலும் தான் குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வருகிறேன் எங்களை அழைத்து செல்ல நீ கட்டுநாயக்கா வரவேண்டும் என தகவல் வழங்கியதன் பின்னர் கடந்த 19-ம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர் மதனும் அவரது குடும்பமும்.

அதன் பின்பு தனது தம்பிக்கு தொலைபேசி அழைப்பை எற்படுத்தினார் சுமார் 3 மணித்தியாலயங்களாக எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

சகோதரனை எதிர்பார்த்து பிரியோசனமில்லை என்பதை உணர்ந்த மதன் ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி  யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

மதன் தனது  மனைவியின் உறவினர் வீட்டில் தங்கி மறுநாள் முழுவதுமாக  சகோதரனுக்கு அழைப்பை ஏற்படுத்தினார். எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

அறிந்தவர்களிடமெல்லாம் விசாரித்தும் இரண்டு நாட்களாக சகோதரனது தொடர்பு கிடைக்கவில்லை.

எதையுமே செய்துகொள்ளமுடியாத மதன், தனது கனவு இல்லத்தை  பார்ப்பதற்க்காக சாவகச்சேரி சென்றார்.தனது  காணியிருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது அங்கு புதிதாக கட்டியவீடு எவையும் இல்லை என்பதை  உணர்ந்துகொண்டார்.
அவரது கனவுகள் யாவும் தகர்ந்து போனது.


அவரது தம்பியை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும்  எந்த பலனும் கிடைக்கவில்லை.

பின்பு ஒருவாறாக ஆறுகால்மடம் பகுதியில் உள்ள சகோதரனின் வீட்டிற்கு செல்கின்றார், அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது, தான் அனுப்பிய பணத்தில் தனக்கென வடிவமைத்த வீடு தம்பிக்கு சொந்தமான காணியில் கட்டப்பட்டிருக்கின்றது.

தனது கனவுகள் யாவும் உடன் பிறந்த சகோதரனால் நிர்மூலமாக்கப்பட்டதை எண்ணி செய்வறியாது, உடனடியாகவே திரும்பி மனைவியின் உறவினர் வீட்டிற்கு சென்று, தம்பி தன்னை ஏமாற்றியதை நினைத்து அழுது புலம்பி நள்ளிரவில் தற்கொலைக்கு முயற்சி செய்த சமயம் குடும்பத்தாரால்  காப்பாற்றப்பட்டார்.

நடந்த நம்பிக்கை துரோகத்தை எண்ணி கண்ணீர் சிந்துகிறார் மதன்.

தன் கனவுகளை
குண்டுமணியாக கோர்த்து
வடிவம் கொடுக்க
ஆசைப்பட்ட
மதனின் கனவுகள்
அஸ்தியாக கரைக்கப்பட்டது
இரத்தத்தின் இரத்தத்தால்.
மனிதம் மரணித்து
நீண்டகாலமாயிற்று...

Post a Comment

 
Top