0
பெற்றோர்களை இழந்த சிறார்களுக்கு உதவித்தொகை வழங்கி வைப்பு.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றும் பெற்றோர்களை இழந்த சிறார்களுக்கு உதவித்தொகை இன்று வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில், கிழக்கு மாகாண ஊழியர்கள் நலன்புரி சங்கத்தின் (வெஸ்லோ) சமூக நலன் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் சியோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை இழந்த சிறார்கள் 13 பேருக்கு இவ் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top