0
வவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியாலங்குத்தில்  ஹயஸ் வாகனம்  ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.!!!வவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியாலங்குத்தில்  ஹயஸ் வாகனம்  ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

இதுதொடர்பில் தெரியவருவது -

வத்தளையில் இருந்து மடு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம்  இன்று (25) காலை 7.40 மணியளவில் ஆண்டியாபுளியாலங்குள வீதியோரத்தில்  உள்ள மின் கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த வாகனத்தில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

வாகனத்தில் பயணித்த 9 பேர் படுகாயமடைந்ததுடன் 2 பேர் சிறுகாயங்களுடன் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top