0
இராணுவ முகாமில் இன்று  மின்னல் தாக்கி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!!


சிகிரியா இனாமலுவவில் உள்ள இராணுவ முகாமில் மின்னல் தாக்கி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இராணுவ முகாமில் பணி புரிந்து கொண்டிருந்த போதே இவ் மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இராணுவ வீரர் பலத்த காயங்களுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இராணுவ வீரர் ஊவா பரணகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் சிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

 
Top