0
வவுனியாவில் வாடிக்கையாளருக்கும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.!!!


வவுனியா பஜார் நிலையத்தில் அமைந்துள்ள மின் உபகரண விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் வாடிக்கையாளருக்கும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் -

நேற்று முன் தினம் மின்சார அடுப்பு (Rice Cooker) ஒன்றை வாடிக்கையாளர் ஒருவர்கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த மின்சார அடுப்பானது பாவனைக்குதவாத நிலையில் பழுதடைந்தது காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாடிக்கையாளர் கொள்வனவு செய்த மின்சார அடுப்பை வர்தக நிலையத்தில் மீள ஒப்படைக்க முற்பட்டவேளை வர்த்தக நிலையத்தினர் மீளபெற மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மின்சார அடுப்பின் பெறுமதிக்கு தகுந்த வேறு பொருட்களை கொள்வனவு செய்யுமாறு வற்புறுத்தி வாடிக்கையாளரை தரக்குறைவான வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து பேசியுள்ளனர்.

இதன் காரணமாக  அவ் வர்த்தக நிலையத்தில் சிறிதுநேரம் பதட்டம் நிலமை காணப்பட்டதுடன் அங்கு குழப்பகரமான சூழல் நிலவியது என அறியமுடிகிறது.


Post a Comment

 
Top