0
பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியாவை சுட்டுக் கொன்ற சவேந்திர சில்வா - பாராளுமன்றில் சீறிப்பாய்ந்த சிறிதரன்.!!!ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழர்களின் இரத்தம் வழிகிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை யுத்த வரையறைக்குள் இராணுவ பிடிக்குள் வைத்திருப்பதற்கான செய்தியே அது.

உலக அரங்கில் 20 ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலைகளை செய்த சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளீர்கள்.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து சுட்டுக் கொன்றவர் சவேந்திர சில்வா. இசைப்பிரியாவை சுட்டுக் கொன்றவரும் இவர்தான். தமிழர்களான நாங்கள் இதனை ஏற்கவில்லை என்று இடித்துரைத்துள்ளார்.

Post a Comment

 
Top