0
ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அமைச்சர்களையும் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் அலரிமாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.!!!

இரவு நேர விருந்துபசாரத்தில் கலந்து கொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 4 வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால செயற்பாடு என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

Post a Comment

 
Top