0
திருகோணமலையில் தமிழ்கிராமம் ஒன்றில் குளவி கொட்டி வயோதிப பெண்மரணம் அடைந்துள்ளார்.மேலும் ஒருவர்  ஆபத்தான நிலையில்!!!திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் கிழக்கில் பின்தங்கிய கிராமமான கடற்கரைசேனையை சேர்ந்த செம்பாத்தை (60வயது) என்ற வயோதிப பெண்மணி சந்தோசபுரத்தில் ஆடு மேய்த்துகொண்டிருந்த வேளைஇச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளவிகள் கலைந்து குறித்த இடத்தில் இருவரையும் கொட்டியதால் மேலதிக சிகிச்சைக்காக மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலன் இன்றி  மரணமடைந்துள்ளார்

மேலும் இதே போன்றதொரு சம்பவம் ஏறாவூரில் கடற்கரையோரம் உள்ள பின்தங்கிய  கிராமமான சவுக்கடியில் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தை சேர்ந்த தனோஜினி குளவிகொட்டுக்கு இலக்காகி உள்ளார்.

தமது பாடசாலை வகுப்பறைக்குள் குளவி கொட்டுக்கு  இலக்காகி ஏறாவூர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக  அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்பட்ட வேளை குறித்த மாணவி  மரணம் அடைந்துள்ளார்.

Post a Comment

 
Top