0
விவசாயிகளுக்கு நல்ல சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தி நாட்டின்  பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு முன் வரவேண்டும்.!!!


நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு விவசாயம் பிரதான இடம் வகிக்கிறது.

வன்னி மாவட்டத்திலும் பெருமளவு விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் இந்த சூழ்நிலையில் எமது விவசாயிகளுக்கு அரசாங்கம்  சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதன் மூலம் எமது விவசாயிகள் மாத்திரமல்ல நாட்டின் பொருளாதாரமும் மேம்பாடடையும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான்  தெரிவித்தார்.

இன்று  ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்கு விடையளிக்கும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் அளிக்கும் இந்த ஊக்குவிப்பானது சுய தேவைக்கான விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை  வர்த்தக ரீதியான விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாக மாற்ற முடியும்.

வன்னியில் பெருமளவாக காணப்படுகின்ற வளமிக்க நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் விவசாயத்திற்கு பெயர் போன பிரதேசமாக காணப்படும் மாதோட்டம் புராதன காலந்தொட்டு இன்று வரையிலும் விவசாயத்தில் சிறப்பான பகுதியாக விளங்குகிறது.

எனினும் எமது வன்னி மாவட்டத்தின் எல்லாப் பிரதேசங்களிலும்  விவசாயிகள் மிகுந்த கஷ்டத்துடனேயே விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் இந்நிலையை போக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

இன்று வன்னி மாவட்டத்தில் விவசாயிகள் கடும் கஷ்டத்துக்கு மத்தியில் தமது விவசாயத் தொழிலை முன்னெடுத்து வருகின்றனர்.

நீரைத் தேக்கி வைத்து விவசாயத்தை முன்னெடுக்க பாழடைந்த குளங்களை சிறந்த முறையில் புனர்நிர்மாணம் செய்ய வேண்டும்.

இன்று வன்னி மாவட்டத்தில் அதிகளவான பாழடைந்த குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

இதுதவிர விவசாயிகளின் ஊக்குவிப்புத் திட்டங்கள், காப்புறுதிகள், மானிய அடிப்படையில் சலுகைகள்,சிறந்த சந்தை வாய்ப்புக்கள், போன்றவற்றில் அரசு இன்னும் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு விவசாயிகளின் முன்னேற்றத்தில் அரசு செலுத்துகின்ற கவனம் நாட்டில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்திலும் செல்வாக்கு செலுத்துவதுடன் விவசாயிகளிடத்தில் சிறந்த நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

Post a Comment

 
Top