0
லங்கா சதோச நிறுவனத்தின் ஏழாவது கிளை சுன்னாகத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.!!!


லங்கா சதோச நிறுவனத்தின் ஏழாவது கிளை சுன்னாகம் மயிலணியில்  இன்றைய (28) தினம் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை சதொச நிறுவனத்தின் வடக்கு மாகாணத்தின் ஏழாவது   கிளை இன்றைய தினம் யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலணி  பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சதோச நிறுவனத்தினை நாடா வெட்டி திறந்து வைத்துள்ளார்.

 குறித்த நிகழ்வில் சதொச  நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் மற்றும் சுன்னாகம் கிளையின் முகாமையாளர்  உடுவில் பிரதேச செயலர்  உடுவில் பிரதேச சபையின் தவிசாளர்  பிரதேச சபை உறுப்பினர்கள்  சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் மதகுருமார் என பலரும் கலந்து கொண்டனர்.Post a Comment

 
Top