0
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ பகிரங்க  மன்னிப்புக் கோரல்.!!!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டது.

தேசிய இளைஞர் மாநாட்டில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது இச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷஇடம்பெற்ற தவறுக்கு  மன்னிப்புக் கோரியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

நிகழ்வு ஒழுங்கமைப்பு குழு சார்பாக மன்னிப்புக் கோருவதோடு இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தாமரை தடாக மண்டபத்தில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் சில ஊடகவியலாளர்களின் அனுமதி மறுக்கப்பட்டதோடு நிகழ்விடத்திற்கு வெளியே ஊடகவியலாளர்கள் காத்திருக்கும் காணொளி ஒன்று பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது நிகழ்வுகள் தொடர்பான காணொளிகள் எச் சந்தர்ப்பத்திலும் இணைய வழியூடாக பார்வையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

 
Top