0
சந்திரிகா குமாரதுங்கவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பது குறித்து சுதந்திரக் கட்சிக்குள் தீவிர ஆலோசனை.!!!


சந்திரிகா குமாரதுங்கவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பது குறித்து சுதந்திரக் கட்சிக்குள் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் இந்த விடயத்தில் இறுதியான தீர்மானத்தை சுதந்திரக் கட்சி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நியமன பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். வெற்றிடமாக உள்ள ஐ.ம.சு.கூ நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, சந்திரிகாவை நியமிக்க வேண்டுமென சுதந்திரக்கட்சிக்குள் கருத்துக்கள் எழுந்துள்ளன. கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பாக ஆலோசித்துள்ளனர்.
சந்திரிகாவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து, அவரை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மகிந்த அண்மையில் கட்சிதாவி, பெரமுனவின் தலைமை பொறுப்பை ஏற்றார். அதனால் சட்டபூர்வமாக அவர் சு.க உறுப்புரிமையையும், எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் இழக்கிறார்.
அதேவேளை, சந்திரிகாவை நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு ஜனாதிபதியும் கொள்கையளவில் இணங்கியுள்ளார் என்று தெரியவருகின்றது. செப்ரெம்பர் 3ஆம் திகதி சுதந்திரக்கட்சியின் பொதுச் சபை கூட்டத்தில் இந்த யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

Post a Comment

 
Top