0
வவுனியாவில் கண் மருத்துவமனைக்கு இன்று (04) அடிக்கல் நாட்டி வைத்தார் தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.!!!


வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் நிர்மாணிக்கப்பட உள்ள ஆனந்தி கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இலண்டனை சேர்ந்த வேலாயுதம் சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாரியாரும் கலந்துகொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். கனீபா, பிரதேச செயலாளர் க.உதயராசா, வவுனியா நகரசபையின் உப நகரபிதா கெ.குமாரசிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மற்றும் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர்  கலந்து கொண்டிதுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top