0
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளியால்  10 நிமிடங்கள் வரை  சபை ஒத்திவைப்பு.!!!

ஏற்றுமதி அபிவிருத்தி நிதி துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு உற்பத்தி வரி போன்ற சட்டங்களின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதம் இன்று (05) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இடம்பெற்ற விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பை நடத்தும்படி எதிரணியினர் எதிர்ப்பை தெரிவிக்க நாளை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை இன்று குறைவாக இருந்ததன் காரணத்தால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சமூகமளித்திருக்காத காரணத்தினாலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டதோடு வாக்கெடுப்பை நடத்துமாறு வலியுறுத்தியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனால் சபாநாயகர் உடனடியாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அழைத்து முடிவெடுப்பதாகவும், அதுவரை 10 நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைப்பதாகவும் அறிவித்தார்.

Post a Comment

 
Top