0
பெருமை கொள்கிறது கிளிநொச்சி மண் - தெற்காசிய உதைபந்தாட்ட‌ கூட்டமைப்பின் 19 வயதிற்குட்பட்ட தொடருக்கான இலங்கை அணியில் தேனுஜன்.!!!


கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலய மாணவன் தேனுஜன் தெற்காசிய உதைபந்தாட்ட‌ கூட்டமைப்பின் 19 வயதிற்குட்பட்ட தொடருக்கான இலங்கை அணியில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

19 வயதிற்குட்பட்ட “SAFF” கிண்ண தொடருக்காக இலங்கை ஜூனியர் உதைபந்தாட்ட‌ அணி நேபாளம் செல்லவுள்ள நிலையில் குறித்த  அணியில் கிளிநொச்சி மாணவன்  இடம் பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.

குறித்த மாணவன் கழக மற்றும் பாடசாலை  மட்டம் போன்றவற்றில் பங்கு பற்றி குறித்த அணிகளின் வெற்றிக்கு வித்திட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சாதைனையாளர்களால் இன்று வடமாகாணம் பெருமைகொள்கிறது.யுத்தத்தால் பாதிப்படைந்து நலிவடைந்துபோன கிளிநொச்சி மண்ணில் இவ்வாறான சாதனைகள் இடம்பெறுவது மேலும் பல சாதனையாளர்களை வலுச்சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top