0
பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டமையால் வெலிங்டன் தோட்டத்தில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.!!!


ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனிபீல்ட் தோட்டம் வெலிங்டன் பிரிவில் குறித்த தோட்ட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டமையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெலிங்டன் தோட்டத்தில் நபர் ஒருவர்   தனது கடமையின் நிமிர்த்தம் இன்று காலை குறித்த தோட்டத்திற்கு சென்ற வேளையில் சடலங்கள் தோண்டப்பட்டுள்ளதை  அவதானித்தவர்,இது குறித்து பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம்  ஹட்டன் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து  உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டதில் 24, 68, 70 ஆகிய வயதுகளுடைய நபர்களின்  உடல்பாகங்கள் எனவும்,எடுத்து சென்றவற்றில்  மண்டை ஓடுகளாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெலிங்டன் தோட்டத்தில் குறித்த சம்பவம் பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top