0
இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் யாழ் பல்கலைக்கழக அணி 45 ஓட்டங்களால் கிண்ணத்தை இழந்தது.!!! இலங்கை பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் யாழ் பல்கலைக்கழக அணி 45 ஓட்டங்களை பெற்று கிண்ணத்தை தவற விட்டதால்  இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

குறித்த போட்டியின் இறுதியாட்டம் நேற்று ராஜரட்ட பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அணியை எதிர்த்து ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர்.இதனடிப்படையில்
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களைப் பெற்றனர்.

குறித்த அணி சார்பில் கனிஸ்க 91,
ஐசித 45, கிகான் 38, மட்காவ 34, டமித்ர 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் யாழ் பல்கலைக்கழக அணி சார்பில் லோகதீஸ்வர்,  ஜனந்தன்,  டனுசன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் சுபேந்திரன் மற்றும் டனுஸ்கா ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் பல்கலைக்கழக அணி 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 45 ஓட்டங்களால் சம்பியன் கிண்ணத்தை தவற விட்டனர்.

அவ்வணி சார்பில் செந்தூரன் 74, துவாரகசீலன் 51, டனுஸ்கா 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி சார்பில் சஜித், செகேரா ஆகியோர் தலா  இரு விக்கெட்டுகளையும் ஐசித, சுபுன்,மட்காவ மற்றும் டிசான் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top