0
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பா.உ காதர் மஸ்தான் தனது ஆதரவாளர்களுடன் கலந்து சிறப்பித்தார்.!!!


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆம் ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  தலைவருமான மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில்  இன்று (04) சுகததாச உள்ளக அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதூங்க உள்ளிட்ட கட்சி செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களும் தனது ஆதரவாளர்களுடன் இந்  நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.Post a Comment

 
Top