0
நஸ்டஈடு வழங்குமாறு பா.உ. டக்ளஸ் தேவானந்தா கோரிக்கைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது - பலாலி விமான நிலையம்.!!!

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு வழங்குமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கு பா.உ. டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களிடம்
குறித்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தபோது இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர்  தெரிவிக்கையில்  –

1950 – 1960 ஆண்டுகாலப் பகுதியில் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களில் இழப்பீடுகள் வழங்கப்படாத 501 உரிமையாளர்களது உரித்தாளர்கள் இழப்பீடுகளைப் பெறுவதற்கு
யுத்தம் காரணமாகவும் நீண்டகால இடப்பெயர்வு காரணமாகவும் அதற்குரிய உறுதிப்படுத்தல்கள் இல்லாத நிலையில் இருக்கின்றமையால் இவர்கள் அந்த இழப்பீடுகளைப் பெறமுடியாதுள்ளனர்.

சுமார் பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த காணி சுவீகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இறந்துள்ள நிலையில் அவர்களது வம்சாவழியினர்
தமது பூர்வீக காணிகளுக்கான  நஸ்டஈடுகளைப் பெற்றுக்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நீண்டகாலமாக இழப்பீடுகள் கிடைக்காதிருக்க உரிமங்களை அடையாளம் காண்பதற்குத் தற்போதுள்ள சந்ததியினரால் முடியாதுள்ளமையே காரணம்.

அத்துடன் முடியுமான அளவு, சந்ததியினர் தமது காணிகளின் ஆவணங்களை இயன்றவரை காட்டும் பட்சத்தில் அதிகாரிகள் அதை ஆராய்ந்து சிபாரிசு செய்யுமிடத்து நஸ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் ரணதுங்கவிடம் கோரியிருந்தேன்.

அத்துடன் பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கென 1984ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது 646 ஏக்கர் காணிகள்  சுவீகரிக்கப்பட்டதாகவும்,

இவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை.

இதையும் விரைவு படுத்தி நஸ்டஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தபோது குறித்த கோரிக்கையையும் அமைச்சர் ரணதுங்க ஏற்றுக்கொண்டு தீர்வு காண்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாகவும் மாற்றம்  நுழைவாயில் பாதை தொடர்பாகவும்

அமைச்சர் தலைமையில் உயரதிகாரிகளை உள்ளடங்கிய குழு ஒன்று அடுத்தவாரம் வயாவிளான் பிரதேச பொது அமைப்புகளை அழைத்து அமைச்சில் காட்சிப்படுத்தல் ஒன்றை மேற்கொள்வதற்கும்

எனது கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் ரணதுங்க இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என பா.உ டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top