0
ஜனாதிபதி சாட்சியம் - பாராளுமன்ற தெரிவுக் குழு.!!!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில், எதிர்வரும் 20 ஆம் திகதி, ஜனாதிபதி முன்னிலையாகி சாட்சி வழங்கவுள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திலோ அல்லது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலோ பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் பெற்றுக்கொள்வார்களென தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இதுவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன, சட்டம் மற்றும் ஒழுங்குகள் முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்னாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் உட்பட அரசியல் பிரதிநிதிகள், அதிகாரிகள் எனப் பலரிடம் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top