0
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் முதலமைச்சர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம்.!!!


வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண சபைக்கு முன்பாக   இன்று (04) காலை இவ்வாறு குறித்த பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற நிலையிலேயே வேலையற்ற பட்டதாரிகள்
தமக்கான வேலைவாய்ப்பை தருமாறு கோரி இவ் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுதத்துள்ளனர்.

மேலும் உள்வாரி,வெளிவாரி பட்டதாரிகள்  என்ற பாகுபாடற்று   அனைத்து பட்டதாரிகளையும் சம அளவில் நோக்கி தமக்கான  நியமனத்தை கால தாமதம் இன்றி வழங்க வேண்டுமென்பதோடு படித்தவர்களுக்கு வேலை வேண்டும் என்ற  கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Post a Comment

 
Top