0
மலையக மக்கள் தொடர்பில் சஜித்திடம் கோரிக்கை முன்வைக்கவுள்ள தமிழ்முற்போக்கு கூட்டணி.!!!

தற்போது இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவிடம் முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (01) தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் உயர்பீடம் கூடவுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவது -

செவ்வாய்க்கிழமை மு.ப. 11 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையகத்திலேயே கூட்டணியின் உயர்பீடம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கூட்டணியின் பிரதி தலைவரும் அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் -

மலையக மக்கள் சார்ந்த பல முக்கிய விடயங்களை சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கையாக முன்வைக்கவுள்தாகவும் ஏற்கனவே, ஐ.தே.மு அரசாங்கத்தில் தாம் இருப்பதால் தம்மால் முன்வைக்கப்படும்  கோரிக்கைகள் தொடர்பில் அவர்களுக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார்.

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழம், பெருந்தோட்டத்துறை கட்டமைப்பை மாற்றியமைத்தல் (தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றுதல்), வீடமைப்புத் திட்டத்தை விரிவுப்படுத்துதல், தோட்டத்தில் பணிப்புரியாதவர்களுக்கும் வீடுகளை வழங்குதல், நகர்புறங்களில் பணிப்புரியும் தோட்டத்தவர்களுக்கு நகர்புற வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்துதல், ஆசிரியர் சேவை மற்றும் அரச சேவைக்கு விகிதாசார அடிப்படையில் உரிய அங்கீகாரம் வழங்குதல், கல்வி அபிவிருத்திக்கான உறுதிப்பாடுகள், மக்கள் தொகைக்கு ஏற்ப கிராம சேவகர் பிரிவுகள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை உருவாக்குதல் உட்பட பல்வேறு விடயங்களை கோரிக்கையாக முன்வைக்கப்படவுள்ளன.

இவ் விடயம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள கூட்டணியின் அரசியல் உயர்பீடத்தில் இதுகுறித்து அனைத்து விடயங்களும் கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவை அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top