0
அனைத்து சிறுபான்மை கட்சிகளுக்கும் அழைப்பு விடும் அமைச்சர் மனோகணேசன்.!!!

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்   ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிப் பெற வைக்கும் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைத்து சிறுபான்மை கட்சியினரையும் நாம் அழைக்கின்றோம் என அமைச்சர் மனோகணேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.

சஜித் ஜனாதிபதியாகினால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடுமென கூறவில்லை இருந்தும் மீண்டும் "பேரழிவு" வராமல்  தடுத்திட இந்நாட்டு சிறுபான்மை மக்களுக்கான இன்றைய  கேடயமாக சஜித் காணப்படுகின்றார்.

நிதானமாக சிந்திக்கும் யாவரும் இதை விளங்கி கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் நடந்துக்கொள்ளவும் வேண்டும்.

எந்தவொரு கட்சியையும் எமது ஜனாதிபதி தேர்தல்  அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டாமென எமது அரசாங்கத்துக்கு உள்ளே எந்தவித நிபந்தனையும் தமிழ் முற்போக்கு கூட்டணி விதிக்கவில்லை. எல்லோரையும் இணைத்துக்கொள்வோம் என  நாம் கூறுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

 
Top