0
போலி நாடகமாடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி -  இன்னும் ஓர் ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வு.!!!
- அங்கஜன் இராமநாதன் இடித்துரைப்பு.

இன்னும் ஓர் ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கான  தீர்வு கிடைக்குமென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  கூற்று தமிழ் மக்களை ஏமாற்றுவதற்க்கான பரப்புரையே என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்  அங்கஜன் இராமநாதன்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டுமே தமிழ் மக்களை காலம்தொட்டு ஏமாற்றி வருவதாகவும், வரவிருக்கின்ற தேர்தலை முன்னிறுத்தியே இவ்வாறான போலி நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் இடித்துரைத்துள்ளார்.

மக்களை ஏமாற்றும் இராஜதந்திர நகர்வின் அடையாளமாகவே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அரங்கேற்றியிருக்கும் கம்பெரலிய திட்டம் எனவும் மிக கடுமையாக சாடியுள்ளார்.

Post a Comment

 
Top