0
யாழ்.நீர்வேலியில் விபத்து.!!!


இன்றைய (08) தினம் யாழ்.நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் விபத்தொன்று நேர்ந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -

மிக வேகமாக வந்த சிற்றூர்தி ( வான்) வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணத்தால், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை மோதித்தள்ளியதால் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மேற்படி விபத்தில் தாயும் மகளும் காயமடைந்துள்ளதுடன் இவ்விருவரும்   சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment

 
Top