0
வவுனியா ஓமந்தையில் வாள் வெட்டு - அறுவர் வைத்தியசாலையில்.!!!

வவுனியா - ஓமந்தை, மாணிக்கர் வளவு பகுதியில் நேற்றிரவு (07) இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில்  6 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்குள்ளானோர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தைச் சேர்ந்த இருதரப்பினற்கு மத்தியில்  சிறு முறுகல்நிலை நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
இதன் தொடர்சியாகவே நேற்று (07) இரவு குறித்த நபர்களின் வீட்டிற்க்குள் புகுந்த குழு, வாள் மற்றும் மான் கொம்பு போன்றவற்றால் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் ஒரே  குடும்பத்தை சேர்ந்த இரு சகோதர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட, அறுவர் காயமடைந்துள்ளதாக அறிய முடிகிறது.

இத்தாக்குதல் சம்பவத்தில் வீட்டில்  நிறுத்தபட்டிருந்த முச்சக்கரவண்டியும் சேதமாக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்துடன் தொடர்பட்ட நபர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாகவும், இவர்களில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணையை ஓமந்தை பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.

Post a Comment

 
Top