0
கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.!!! 

கொழும்பு நகரை அலங்கரிக்கும் வகையிலும் இலங்கையை ஒரு பாரிய தொலைத்தொடர்பு நாகரிகத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் தெற்காசியாவில் நவீன வசதிகளுடன்கூடிய உயரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (16) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

தாமரைக் கோபுரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வை குறிக்கும் வகையில் ஜனாதிபதி அவர்களினால் நினைவு முத்திரை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தாமரைக் கோபுரத்திற்கான இணையத்தளத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது திறந்து வைத்தார்.

ஜனாதிபதி அவர்களுக்கும் சீன பிரதிநிதிகளுக்குமிடையே நினைவுப் பரிசில்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் தலைவர், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் சீன தூதுவர் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.Post a Comment

 
Top